தமிழ்நாட்டில் இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய குடியரசுத் தலைவர் முர்மு சென்னை வருகிறார். இதையடுத்து வருகிற 3 ஆம் தேதி அன்று மாலை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய குடியரசு தலைவர் வருவதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் கொள்ளிடக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தை நேரில் ஆய்வு செய்தார்.
யாத்ரிகர் நிவாஸ் எதிரே உள்ள ஹெலிபேடு தளத்தை வருவாய் துறை, ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர், ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர், சுகாதார துறை தீயணைப்பு துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உடனிருந்து ஆய்வில் ஈடுபட்டார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
Comments