ஜனாதிபதி திரௌபதி முர்மு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக செப்டம்பர் 3-ஆம் தேதி காலை விமானம் மூலமாக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தருகிறார். அதன் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் புறப்பட்டு செல்கிறார். பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் திருவாரூரில் இருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தரிசனம் செய்வதற்காக அன்று மாலை வருகை தருகிறார். இதற்காக ஸ்ரீரங்கம் கோவில் அருகே கொள்ளிடம் கரையில் அமைக்கப்பட்டு இருக்கும் ஹெலிபேட் தளம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஹெலிபேட் தளத்தில் இருந்து சாலை மார்க்கமாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பின்னர் மீண்டும் ஹெலிபேட் தளத்திற்கு வருகை தந்து, திருச்சி விமான நிலையம் புறப்பட்டு செல்கிறார் இந்நிலையில் தற்போது அந்த ஹெலிபேட் தளத்தில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு
திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, வான் பாதுகாப்பு படை அதிகாரிகள் முன்னிலையில் ஒத்திகை நடைபெற்றது.
இதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இந்த ஒத்திகையானது நடைபெற்றது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments