Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை – திருச்சி ஆட்சியர் அறிவிப்பு

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM-YASAVI-Top Class School Education in Schools for OBC, EBC & DNT students உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் (National Scholarship portal) விண்ணப்பிக்கலாம்.
இதர பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC), பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் PM-YASAVI-Top Class School Education in Schools for OBC, EBC & DNT students மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. 2025-2026 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட (Top Class Schools) பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 இலட்சம், இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்:31.10.2025, கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கடைசி நாள்: 15.11.2025,
புதுப்பித்தல்: இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் (https://scholarships.gov.in) (National Scholarship Portal) Renewal Application என்ற இணைப்பில் (Link) சென்று OTR Number (One time Registration) பதிவு செய்து 2025-26 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பித்தல் (Renewal) மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

புதியது: இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் தங்களது கைப்பேசிஎண் (Mobile number) மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் OTR Number & Password பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும். மேற்படி OTR Number பயன்படுத்தி 2025-26 ஆம் ஆண்டிற்கான பதிவேற்றம் செய்து புதியது (Fresh Application) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிந்திட தொடர்புடைய முதன்மை கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm என்ற இணையதளம் மூலம் காணலாம். கல்வி நிறுவனங்கள் மாணவ/மாணவியர்கள் விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பரிசிலித்து அடுத்த நிலையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலருக்கு அனுப்புதல் வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும் போது தொடர்புடைய பள்ளி தலைமையாசிரியர் Login Credential சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்தல் வேண்டும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship Portal (https://scholarships.gov.in) இணையதளத்தினை அணுகி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *