வருகின்ற 11.03.2026 அன்று இந்திய பிரதமர் அவர்கள் திருச்சி மாநகருக்குள் வருகை தர இருப்பதால் திருச்சி மாநகரக்குள் வந்து செல்லும் நகர பேருந்துகள் மற்றும் வெளியூர் பேருந்துகள் செல்லவேண்டிய மாற்று வழித்தடங்கள்:
சென்னை, பெரம்பலூர், சேலம், மார்க்கத்திலிருந்து வரும் நகர் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் மன்னார்புரத்தில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கீழே இறங்கி சர்வீஸ் சாலை வழியாக இடது புறம் திரும்பி கே. கே. நகர், LIC காலனி, உழவர்சந்தை, சாத்தனூர் குளம் வழியாக சென்று வலதுபுறம் திரும்பி செட்டியப்பட்டி Water tank வழியாக பஞ்சப்பூர் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
மதுரை மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள் பஞ்சப்பூர் ஜங்சன் வரை வந்து அங்கிருந்து வலது பக்க சாலையில் திரும்பி எதிர் திசையில் பேருந்து நிலைத்திற்கு பின் புறமாக வரவேண்டும்.
பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை மார்க்கமாக செல்லும் நகர பேருந்துகள் வழக்கமான பாதையில் வெளியே செல்ல வேண்டும்.
கரூர், கோயம்புத்தூர், சேலம், சென்னை செல்லும் பேருந்துகள் பின்புறமாக வெளியே வந்து செட்டியப்பட்டி, சாத்தனூர்குளம், வழியாக ஓலையூர் ஜங்கன் வழியாக கே.கே. நகர் வழியாக ஒயர்லஸ் ரோட்டை அடைந்து TVS Tolget வழியாக வெளியே செல்ல வேண்டும்
(குறிப்பு: சூழ்நிலையை பொருத்தும் வாகன நெரிசலை பொருத்தும் வாகன வழித்தடத்தில் மாற்றம் செய்யபடலாம்.)
திருச்சி மாநகரை கடந்து செல்லும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் செல்லவேண்டிய மாற்று வழித்தடங்கள்:
சென்னை, பெரம்பலூர் மார்க்கத்திலிருந்து சேலம், திண்டுக்கல், மதுரை செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து, நெ.1 டோல்கேட், முசிறி, குளித்தலை, மணப்பாறை, துவரங்குறிச்சி வழியாக சென்று வரவேண்டும்.
சென்னை, பெரம்பலூர் மார்க்கத்திலிருந்து தஞ்சாவூர், புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து குன்னம், அரியலூர், திருவையாறு வழியாக சென்று வரவேண்டும்.
சேலம் மார்க்கத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் கனரக வாகனங்கள் முசிறி, பெரம்பலூர், குன்னம், அரியலூர் வழியாக சென்று வரவேண்டும்.
மதுரை மார்க்கத்திலிருந்து சென்னை, பெரம்பலூர் செல்லும் கனரக வாகனங்கள் துவரங்குறிச்சியிலிருந்து திருப்பிவிடப்பட்டு மணப்பாறை, குளித்தலை, முசிறி, நெ.1 டோல்கேட் வழியாக பெரம்பலூர் செல்லவேண்டும்.
திண்டுக்கல் மார்க்கத்திலிருந்து சென்னை, பெரம்பலூர், தஞ்சாவூர் செல்லும் கனரக வாகனங்கள் மணப்பாறையில் திருப்பிவிடப்பட்டு குளித்தலை, முசிறி, நெ.1 டோல்கேட், பெரம்பலூர், அரியலூர் வழியாக செல்லவேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சாவூர் மார்க்கத்திலிருந்து சேலம், கரூர், திண்டுக்கல், செல்லும் கனரக வாகனங்கள் அரியலூர், பெரம்பலூர், நெ.1 டோல்கேட், முசிறி, குளித்தலை, மணப்பாறை வழியாக செல்லவேண்டும்.
தஞ்சாவூர் மார்க்கத்திலிருந்து மதுரை, திருநெல்வேலி செல்லும் கனரக வாகனங்கள் கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை வழியாக செல்லவேண்டும்.
கரூர் மாவட்டம்
கரூர் மார்க்கத்திலிருந்து
தஞ்சாவூர் செல்லும் கனரக வாகனங்கள் குளித்தலையிலிருந்து முசிறி, நெ.1 டோல்கேட், பெரம்பலூர், குன்னம், அரியலூர் வழியாக சென்று வரவேண்டும்.
கரூர் மார்க்கத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் குளித்தலையிலிருந்து திருப்பி விடப்பட்டு மணப்பாறை, விராலிமலை வழியாக செல்லவேண்டும்.
புதுக்கோட்டையிலிருந்து சென்னை பெரம்பலூர் செல்லும் கனரக வாகனங்கள் கந்தர்வக்கோட்டை, தஞ்சாவூர், திருவையாறு, அரியலூர் வழியாக செல்ல வேண்டும். புதுக்கோட்டையிலிருந்து கரூர், திண்டுக்கல், சேலம் செல்லும் கனரக வாகனங்கள் விராலிமலை, மணப்பாறை, குளித்தலை, முசிறி வழியாக செல்லவேண்டும்.
அரியலூரிலிருந்து சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூர், பெரம்பலூர், துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை,
துவரங்குறிச்சி வழியாக செல்லவேண்டும்.
உள்ளூர் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் முசிறி, திருச்சி மாநகருக்குள் வராமல் BHEL ரவுண்டானாவிலிருந்து
திருப்பிவிடப்படவேண்டும்.
No.1 டோல்கேட்டிலிருந்து
திருப்பிவிடப்படவேண்டும்.
திருச்சி மாநகருக்குள் வராமல்
ஜியபுரத்திலிருந்து திருச்சி மாநகருக்குள் வராமல் திருப்பிவிடப்படவேண்டும்.
ராம்ஜிநகரிலிருந்து திருச்சி மாநகருக்குள் வராமல் திருப்பிவிடப்படவேண்டும்.
மணிகண்டத்திலிருந்து திருச்சி மாநகருக்குள் வராமல்
திருப்பிவிடப்படவேண்டும்.
மாத்தூர் ரவுண்டானாவிலிருந்து
திருச்சி மாநகருக்குள் வராமல்
திருப்பிவிடப்படவேண்டும்.
திசை திருப்பும் இடங்கள்: கஜாமியன் x NH சாலை, மன்னார்புரம், அரிஸ்டோ பாலம், வண்ணான்கோயில், மணப்பாறை, விராலிமலை, மணிகண்டம், மாத்தூர் சந்திப்பு, துவாக்குடி, பால்பண்ணை சந்திப்பு, ஹூண்டாய் நிறுவனம், சஞ்சீவி நகர் சந்திப்பு, எண் 1 டோல்கேட்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments