திருச்சிராப்பள்ளி மாவட்டம். துறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த வாதி ஜெயா 40/25 க.பெ பாலாஜி என்பவருக்கு மூன்று மகள்கள் இருப்பதாகவும். இதில் பாதிக்கப்பட்ட சிறுமியானவர் 12-ம் வகுப்பு படித்துவருவதாகவும், இந்நிலையில் மேற்படி பாதிக்கப்ட்ட சிறுமி கடந்த 04.09.2025-ம் தேதியன்று பள்ளி முடித்து வந்து வயிறு வலி வந்ததாகவும், உடனடியாக சிறுமியின் பெற்றோர் துறையூர் அன்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில், சிறுமி கர்ப்பமாக இருப்பதாகவும், பின்னர் அன்றைதினமே குழந்தை பிறந்துள்ளது.
பின்னர். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் அவரது தாயார் கேட்ட போது. கடந்த 15.12.2024-ம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியானவர் அவர்களது தோட்டத்திற்கு சென்ற போது, அங்கு மேற்படி சிறுமியின் நண்பரான ரமேஷ் 45/25 த.பெ வீரமலை, கண்ண்ணூர்பாளையம் என்பவர் பாதிக்கப்பட்ட சிறுமியை அங்கு இருந்த தகர கொட்டகைக்கு கட்டாயப்படுத்தி இழுத்துசென்று சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறியதன் பேரில் பாதிக்கபட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேற்படி எதிரி மீது முசிறி
அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண். 36/25 u/s 5 (j) (ii) r/w 6(1) of POCSO Act 6 1 23.09.2025 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு சம்மந்தமாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்கள் மேற்படி குற்ற வழக்கின் எதிரியை பிடிக்கும் பொருட்டு முசிறி அனைத்து மகளிர் ஆய்வாளர் திருமதி. வாணி என்பவருக்கு உத்தரவிட்டதின் பேரில் 23.09.25 அன்று மேற்படி எதிரியை கைது செய்து கணம் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments