முசிறியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ராமஜெயம் தனியார் பேருந்து கோட்டூர் அருகே சாலையில் வந்து கொண்டிருந்தது. திருச்சியில் இன்று காலை முதலே மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக இருந்த பள்ளத்தில் திடீரென கவிழ்ந்தது.
உள்ளே இருந்த பயணிகள் சிறு குழந்தைகள் பெண்கள் அலறியடித்து தங்களை காப்பாற்ற குரல் எழுப்பினர். அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து பெண்கள் சிறு குழந்தைகளை முதலில் காப்பாற்றி காயம் அடைந்தவர்களை மருத்துவ சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வாகன மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து ஐந்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments