திருச்சி துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்தவர் நிர்மலா (45 ). இவர் இன்று மத்திய பேருந்து நிலையத்திலிருந்து – ஸ்ரீரங்கம் செல்கின்ற தனியார் பேருந்தில், காந்தி சந்தை அருகே ஏறுவதற்கு முயற்சி செய்துள்ளார்.
ஓடும் பேருந்தில் பெண் பயணி ஏற முயன்றதை தனியார் பேருந்தின் ஓட்டுநர் கவனிக்கவில்லை. வர்த்தக போட்டியில் முன்னே நின்ற மற்றொரு தனியார் பேருந்தை முந்திச்செல்ல பேருந்தை மாற்றுபாதையில் வேகமாக இயக்கியுள்ளார்.
அப்போது முன்பக்க படிக்கட்டில் தவறி விழுந்த நிர்மலாவின் இரண்டு கால்களிலும் பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கின. அலறி துடித்த அப்பெண்ணை அருகில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலென்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தனியார் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை பிடித்து தாக்கினார்கள்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காந்தி மார்க்கெட் காவல்நிலைய ஆய்வாளர் சுகுமார் மற்றும் போலீசார் அனைவரையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments