தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொது மேலாளர் கூறுகையில்… சிறப்பு வாய்ந்த நீராவி ரயில் இன்ஜினை தயாரித்த ரயில்வே ஊழியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். வந்தே பாரத் திட்டம் தமிழகத்தில் தொடங்குவதற்கு சில காலம் ஆகும், அனேகமாக நடப்பு நிதியாண்டில் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் 5 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பொது மக்களின் தேவைக்கேற்ப வருகிற 31ம் தேதி கூடுதலாக ஒரு ரயில் இயக்கப்பட உள்ளது. மூன்று ரயில்கள் அக்டோபர் மாதத்திலும் ஒரு ரெயில் நவம்பர் மாதத்திலும் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மற்ற ரயில்வேயைக் காட்டிலும் தெற்கு ரயில்வே மட்டுமே பாரத் கவுரவ் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துகிறது என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments