மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி மற்றும் தஞ்சாவூர் சரக காவல் எல்லைக்குட்பட்ட மாவட்டங்களில் தங்கியுள்ள வெளிநாட்டினர்களின் (Foreign Nationals) விவரங்கள் Form ‘C’ (Form -III) மற்றும் Form ‘S’ (Form -II) என்ற படிவங்களின் மூலமாக முறையாக FRRO வலைதளத்தில் பதிவு செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Form ‘C’ – Immigration and Foreigners Act 2025 Sec 8, 10-60TLIL வெளிநாட்டினரை தங்கள் இல்லங்கள், ஹோட்டல்கள், மருத்துவமனை போன்ற இடங்களில் தங்க அனுமதிக்கும் போது சம்மந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் FRRO (https://indianfrro.gov.in/frro/FormC/) என்ற வலைதளத்தில் தங்கும் வெளிநாட்டினர் குறித்த விபரங்களை பூர்த்தி செய்வது கட்டாயமாகும்.
Form ‘S’ Immigration and Foreigners Act 2025 Sec 9-60TLIL வெளிநாட்டினரை தங்கள் கல்வி நிறுவனங்களில் கல்வி பயில தங்க அனுமதிக்கும் போது சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் FRRO (https://indianfrro.gov.in/sForm/) வலைதளத்தில் கல்வி பயிலும் வெளிநாட்டினர் குறித்த விபரங்களை பூர்த்தி செய்வது கட்டாயமாகும்.
தனி வீடுகள் அல்லாத மேலே குறிப்பிட்ட அனைத்து வகையான இடங்களிலும் வெளிநாட்டினரை தங்க அனுமதிக்கும் போது பதிவு செய்வதற்கு சம்மந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அனுமதி பெற்று பின்னரே பதிவு Form ‘C’ (Form -III) மற்றும் Form ‘S’ (Form-I) ஆகியவற்றை பதிவு செய்ய முடியும்.
திருச்சி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தங்கியுள்ள வெளிநாட்டினர்களில் • கல்வி பயில்வதற்காக வருகை புரிந்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் 86 நபர்களின் வருகையை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் முறைப்படி FRRO வலைதளத்தில் Form “C” and ‘S’ பதிவுகளை பதிவேற்றம் செய்துள்ளன.
மாணவர்கள் அல்லாத வெளிநாட்டவர்களில் மொத்தம் 439 நபர்கள் திருச்சி சரகத்தில் தங்கியிருப்பதும் அதில் 353 நபர்களை தங்க அனுமதித்துள்ள தங்கும் இடத்தின் உரிமையாளர்கள் சட்டப்படி Form “C” என்ற படிவத்தினை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்துள்ளனர் என்றும் மீதமுள்ள 86 வெளிநாட்டினர்களின் விவரங்களை தங்கும் இடத்தின் உரிமையாளர்கள் சட்டப்படி பதிவேற்றம் செய்யவில்லை
என்றும் தெரிய வருகிறது.
இதை தொடர்ந்து தஞ்சாவூர் சரகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, தஞ்சாவூர் சரகத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் தங்கியுள்ள, வெளிநாட்டு மாணவர்கள் 32 நபர்களின் அவர்களின் வருகையை பதிவு செய்யும் விதமாக அனைத்து மாணவர்களுக்கும் அவர்களை கல்வி நிறுவனங்களால் – Form “C” and ‘S’ பதிவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர்கள் அல்லாத வெளிநாட்டவர்களில் மொத்தம் 461 நபர்கள் தஞ்சாவூர் சரகத்தில் தங்கியிருப்பதும் அதில் 380 நபர்களை தங்க அனுமதித்துள்ள தங்கும் இடத்தின் உரிமையாளர்கள் சட்டப்படி Form “C” என்ற படிவத்தினை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்துள்ளனர் என்றும் மீதமுள்ள 81 வெளிநாட்டினர்களின் விவரங்களை தங்கும் இடத்தின் உரிமையாளர்கள் சட்டப்படி பதிவேற்றம் செய்யவில்லை என்றும் தெரிய வருகிறது.
வெளிநாட்டு மாணவர்கள் 118 நபர்களின் அவர்களின் வருகையை பதிவு செய்யும் விதமாக அனைத்து மாணவர்களுக்கும் அவர்களை Form “C” and ‘S’ பதிவும் கல்வி நிறுவனங்களால்
என்றும் மீதமுள்ள 86 வெளிநாட்டினர்களின் விவரங்களை தங்கும் இடத்தின் உரிமையாளர்கள் சட்டப்படி பதிவேற்றம் செய்யவில்லை என்றும் தெரிய வருகிறது.
இதை தொடர்ந்து தஞ்சாவூர் சரகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, தஞ்சாவூர் சரகத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் தங்கியுள்ள,
வெளிநாட்டு மாணவர்கள் 32 நபர்களின் அவர்களின் வருகையை பதிவு செய்யும் விதமாக அனைத்து மாணவர்களுக்கும் அவர்களை கல்வி நிறுவனங்களால் Form “C” and ‘S’ பதிவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்கள் அல்லாத வெளிநாட்டவர்களில் மொத்தம் 461 நபர்கள் தஞ்சாவூர் சரகத்தில் தங்கியிருப்பதும் அதில் 380 நபர்களை தங்க அனுமதித்துள்ள தங்கும் இடத்தின் உரிமையாளர்கள் சட்டப்படி Form “C” என்ற படிவத்தினை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்துள்ளனர் என்றும் மீதமுள்ள 81 வெளிநாட்டினர்களின் விவரங்களை தங்கும் இடத்தின் உரிமையாளர்கள் சட்டப்படி பதிவேற்றம் செய்யவில்லை என்றும் தெரிய வருகிறது.
வெளிநாட்டு மாணவர்கள் 118 நபர்களின் அவர்களின் வருகையை பதிவு செய்யும் விதமாக அனைத்து மாணவர்களுக்கும் அவர்களை கல்வி நிறுவனங்களால் Form “C” and ‘S’ பதிவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர்கள் அல்லாத வெளிநாட்டவர்களில் மொத்தம் 900 நபர்கள் மத்திய மண்டலத்தில் தங்கியிருப்பதும் அதில் 733 நபர்களை தங்க அனுமதித்துள்ள தங்கும் இடத்தின் உரிமையாளர்கள் சட்டப்படி Form “C” என்ற படிவத்தினை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்துள்ளனர் என்றும் மீதமுள்ள 167 வெளிநாட்டினர்களின் விவரங்களை தங்கும் இடத்தின் உரிமையாளர்கள் சட்டப்படி பதிவேற்றம் செய்யவில்லை என்றும் தெரிய வருகிறது. எனவே மத்திய மண்டல காவல் துறை தலைவர் அவர்களின் அறிவுத்தலின் பேரில் 30.01.2026 அன்று முதல் திருச்சி சரகத்தில் 02.02.2026 வரை மேற்படி Form ‘C’ பதிவேற்றம் செய்யப்படாமல் 86 நிலுவையில் இருந்ததில், 77 முடிக்கப்பட்டும், மீதமுள்ள 9 விரைவில் முடிக்க அறிவுத்தப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர் சரகத்தில் 81 நிலுவையில் இருந்ததில் 73 முடிக்கப்பட்டும், மீதமுள்ள 8 விரைவில் முடிக்க அறிவுத்தப்பட்டுள்ளது. மத்திய மண்டலத்தில் ஆக மொத்தம் 150 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, 17-ஐ விரைவில் முடிக்க அறிவுத்தப்பட்டுள்ளது.
Form ‘C’ மற்றும் Form ‘S’ பதிவுகள் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. Hotels, Lodges, Guest Houses, Home Stays, Hospitals மற்றும் Educational Institutions ஆகியவை தங்கள் நிறுவனங்களில் வெளிநாட்டவர் தங்கிய 24 மணி நேரத்திற்குள் Form ‘C’ பதிவு செய்ய வேண்டும். அதேபோல், கல்வி நிறுவனங்களில் சேரும் வெளிநாட்டு மாணவர்களின் விவரங்கள் Form ‘S’ மூலம் பதிவு செய்யப்பட வேண்டும்.
Form ‘C’ (Form III) பதிவு செய்யத் தவறினால், (Section 8 Act & rule 17, Sum (amount) to be compounded Rs.50,000/- per case) மற்றும் Form ‘S’ (Form II) (Section 9 Act & rule 17, Sum (amount) to be compounded Rs.1,00,000/- per case)-ன் சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, அனைத்து நிறுவனங்களும் விதிமுறைகளை பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments