தமிழக முழுவதும் அண்ணா பல்கலை கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் இன்று ஒரு நாள் கருப்பு பட்டையை அணிந்து போராட்டத்தை தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் கற்பித்தல் மற்றும் உயர்கல்வியின் தரத்தை பாதிக்கும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினை குறித்து மாநில அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த போராட்டமானது நடைபெற்றது.
நீண்ட காலமாக சென்னை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகி உறுப்புக்கல்லூரி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளில் பராபட்சம் பார்ப்பதாகவும்,
பல்கலைக்கழக நிர்வாகத்தின் முடிவுகளில் சீரான தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும்.
ஆசிரியர்கள் குறைகள் தீர்க்கப்படாமல் உள்ளதாகவும், பதவி உயர்வுகளில் சீரான தன்மை இல்லை எனவும் கூறி அரசின் மற்றும்
சென்னை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இன்று ஒரு நாள் ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments