சொத்தை அபகரித்த மகன் - மீட்டு தரக்கோரி மண்சோறு சாப்பிட்ட வயதான தம்பதியினர்!!

சொத்தை அபகரித்த மகன் - மீட்டு தரக்கோரி மண்சோறு சாப்பிட்ட வயதான தம்பதியினர்!!

திருச்சி நவலுாா் குட்டப்பட்டில் வசித்து வருபவர் சின்னபொண்ணு.இவரை இவருடைய முதல் கணவர் சுக்குரு கைவிட்ட நிலையில் 1993 ஆம் ஆண்டு நாகராஜ் என்பவர் சின்னப்பொண்ணை திருமணம் செய்து கொண்டார். அதனையடுத்து அவர்கள் இருவரும் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் வசித்து வருகின்றனர்.

சின்னப் பொண்ணுக்கு சேர வேண்டிய சொத்தை முதல் கணவருக்கு பிறந்த மகன் முருகன் என்பவர் அபகரித்து கொண்டதாகவும் தனக்கு கிடைக்க வேண்டிய சொத்தை பெற்று தருமாறு பலமுறை சின்னப்பொண்ணு மனு அளித்துள்ளார்.ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் சின்னப்பொண்ணு(61) தன் இரண்டாவது கணவர் நாகராஜ்(62) உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.அப்போது அவர்கள் இருவரும் திடீர் என்று கலெக்டர் அலுவலகம் முன்பு மண் சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வயதான தம்பதியினர் மண் சாப்பிடுவதை கேள்வியுற்று அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் சிவராசு உடனடியாக வாயிலுக்கு வந்தார். அப்போது ஆட்சியரின் காலில் விழுந்து சின்னபொண்ணு கண்ணீர் விட்டார்.

https://youtu.be/hO6NVGIYrpo
Advertisement

அவர்களை சமாதானப்படுத்திய மாவட்ட ஆட்சியர் பிரச்சினை குறித்து கேட்டறிந்தார். அவர்களது மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.