கள்ளக்குறிச்சி கள்ள சாராய மரணங்களுக்கு காரணமான முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்பி ப.குமார், மாநகர செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன், வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி, முன்னாள் எம்பி ரத்தினவேல், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பூனாட்சி, சிவபதி உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்பி ப.குமார்…. இந்த வீடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் இந்த கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அப்படி சிபிஐ விசாரணை செய்தால் மட்டுமே முதலமைச்சர் ஸ்டாலினிடம் விசாரணை செய்ய முடியும் என்றார். தற்போது பத்திரிகைகள் அதிமுக ஆட்சியில் ஓரிரு சாவுகள் இதுபோல் நடந்தாலே சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் அதனை பெரிதுபடுத்துவர்.

ஆனால் தற்பொழுது 55 பேருக்கு மேல் உயிரிழந்தும் யாரும் வாய் திறக்கவில்லை என்றார். இந்த சம்பவம் நடைபெற்று நான்கு நாட்கள் ஆகியும் பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை அந்த மாவட்டத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை. மேலும் எந்த வித விசாரணையும் அங்கு மேற்கொள்ளவில்லை என்பதால் தமிழக மக்கள் கொந்தளித்துள்ளனர் என முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தெரிவித்தார்.

மேலும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு கூட காவல்துறை அனுமதி வழக்கவில்லை மேடை அமைத்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு கூட எங்களுக்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை, உயர்நீதிமன்றமே திமுக அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ளது என்றார். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் கொடுப்பது அவர்களின் வாழ்வாதாரத்திற்காக தானே என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments