Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இந்தி பெயர்ப்பலகை எதிர்ப்பு: திருச்சி ரயில்வே அலுவலகம் முன் தந்தை பெரியார் திராவிடர் கழகம் போராட்டம்

ஒன்றிய அரசு அலுவலகங்களில் தொடர்ந்து இந்தியை திணித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு திருச்சி ரயில்வே மண்டல அலுவலக நுழைவாயிலில் கர்தவ்ய த்வார் என இந்தியில் பெயர் சூட்டியிருக்கிறது‌.

தமிழ்நாட்டிற்கு மோடி வரும் போதெல்லாம் தமிழில் சில வார்த்தைகள் பேசுவது தமிழ்மெழியை புகழ்ந்து பேசுவது என்ற நாடகங்களை நடத்திவிட்டு தமிழர்களுக்கு புரியாத மொழியில் புரியாத வார்த்தைகளில் பெயர் சூட்டி இருக்கிறார்.

இப்படி தொடர்ந்து தமிழ்மொழியையும், தமிழர்களையும் புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து 05.03.2026 வியாழன் மாலை 5:00 மணிக்கு திருச்சி ரயில்வே மண்டல அலுவலக நுழைவாயில் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் நடைபெறும் என்று கூறினார் கு.இராமகிருட்டிணன், பொதுச்செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம் அவர்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *