திருவெறும்பூர் அருகே உள்ள எழில் நகர் பகுதியில் தார் சாலை போடுவதற்காக சாலைகளை கொத்தி ஜல்லி பரப்ப பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் தார் சாலை போடாததை கண்டித்து எழில் நகர் வளர்ச்சி சங்கம் சார்பில் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
திருவெறும்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சி எழில் நகர் பகுதியில் புதிதாக சாலை போடுவதற்காக பழைய சாலையில் உள்ள கப்பிகளை பேர்த்து புதிய காப்பிகளை பரப்பியுள்ளனர்.இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகம் சாலைகளை போடாமல் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் பழுதாவதுடன் பலர் கீழே விழுந்து அடிபட்டு காயம் அடைந்து வருகின்றனர்.இதனால் அதிருப்தி அடைந்த எழிர்நகர் வளர்ச்சி சங்கதலைவர் ராஜப்பா, பொதுச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் இன்று காலை திடீரென திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குள் நுழைந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தகுமார் அலுவலக அறையை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி சம்பந்தப்பட்ட வர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.அந்த பேச்சு வார்த்தையில் நாளை மறுநாள் சாலை போடும்பணி தொடக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை விளக்கிக் கொண்டனர் இதனால் சுமார் அரை மணி நேரம் திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
Comments