திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடி தண்ணீர் வரவில்லை எனக்கூறி பொதுமக்கள் காலி குடங்களுடன் திருவெறும்பூர் கல்லணை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வேங்கூர் ஊராட்சி ஆகும்.இந்த ஊராட்சியில் ஒரு சில பகுதிக்கு கடந்த மூன்று மாதமாக சரிவர குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பல முறை முறையிட்டதாகவும்ஆனால் அதிகாரிகள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முற்றிலுமாக குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மாலை திடீரென திருவெறும்பூர் கல்லணை சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்பொழுது கல்லணையில் இருந்து திருவெறும்பூர் நோக்கி வந்த இரண்டு அரசு பேருந்துகளும் செல்ல முடியாமல் சிறைபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் சம்பந்தப்பட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.இந்த நிலையில் இது குறித்து உடனடியாக திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது அவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதோடு உடனடியாக இந்த பிரச்சனையை நாளை காலை சரி செய்து கொடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை விளக்கி கொண்டனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் அப்பகுதிகள் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF



Comments