
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் போட்டியிடுகிறார். இந்நிலையில் தினந்தோறும் திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியினருடன் வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி 9வது வார்டு சஞ்சய்காந்தி நகர் நாடார் தெருவில் வெல்லமண்டி நடராஜன் அப்பகுதி மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளருடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சாக்கடை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளின்றி இருப்பதாகவும், ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு வெல்லமண்டி நடராஜன் இந்த பகுதியில் வந்து குறைகளை கேட்கவில்லை என கூறி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் அதிமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


மேலும் பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்ற அதிமுகவினரிடம் அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதம் செய்ததையடுத்து அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெருக்களில் கருப்பு கொடி கட்டியுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW







Comments