திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுக்கா, முத்தரசநல்லூர் – முருகம்பேட்டை பகுதியில் சுமார் 4000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் தினமும் கல்வி நிலையங்களுக்கும் வேலைக்குச் செல்லும் நிலையில் உள்ளனர்.கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக அப்பகுதியில் இருந்த பழைய பேருந்து நிழற்குடை இடித்துத் தகர்க்கப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக இதுவரை புதிய பேருந்து நிழற்குடை அமைக்கப்படவில்லை.
இதனால் பயணிகள் வெயிலிலும் மழையிலும் தங்க இடமின்றி சாலையோரத்தில் நின்று பேருந்து ஏறிச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் கடுமையான சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
எனவே, அப்பகுதி பொதுமக்களின் நலனை கருதி முத்தரசநல்லூர் – முருங்கப்பேட்டை பகுதியில் விரைவாக ஒரு புதிய பேருந்து நிழற்குடை கட்டித் தர நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments