திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் பகுதியில் போதை ஊசி புழக்கம் அதிகமாக இருப்பதாகவும், இதனால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் பகுதியில் போதைப்பொருள் புழக்கங்கள் அதிகரிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகின்றன. இந்த நிலையில் அரியமங்கலம் ரயில்வே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில் ஒன்றாக கூடி போதை ஊசிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் பயன்படுத்தக்கூடிய போதை ஊசிகளை ஆங்காங்கே விட்டுச் செல்வதால் அதை குழந்தைகள் விளையாட்டுத்தனமாக எடுத்து பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த போதை ஊசி பயன்படுத்தக்கூடிய நபர்களால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவுஅரியமங்கலம் தண்டவாளம் பகுதியில் போதை ஊசி பயன்படுத்திய நபர்களை அங்குள்ள இளைஞர்கள் சிலர் விரட்டிப் பிடித்த அந்த நபர்கள் போதை ஊசிகளை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடினர்.
மேலும் இது தொடர்பாக இளைஞர் ஒருவர் பேசிய வீடியோ ஒன்று அப்பகுதி இணையத்தில் பரவியது.

அதில் வெளி பகுதிகளில் இருந்து வரக்கூடிய சில மர்ம நபர்கள் இங்கே வந்து தண்டவாளத்தில் அமர்ந்து போதை ஊசிகளை பயன்படுத்தி வருவதாகவும், அவர்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும், வன்முறையும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கும் வழிவகை செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இளைஞர் பேசியுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments