மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது.திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,
இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு தொடர்பான மனுக்கள், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வேண்டி மனுக்கள், முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, விபத்து நிவாணத்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை மற்றும் நலிந்தோர் நலத்திட்ட
உதவித்தொகைகள் பெறுவது தொடர்பான மனுக்கள், தெருவிளக்கு, தண்ணீர் இணைப்பு குழாய், தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டுவது தொடர்பான மனுக்கள்,கல்வி உதவித்தொகை, வங்கி கடன், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள், தையல் இயந்திரம், சலவைப்பெட்டி வேண்டி விண்ணப்ப மனுக்கள் மேலும்
ஓய்வூதிய பயன், தொழிலாளர் நல வாரியம் தொடர்பான மனுக்கள், வேலை வாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 457 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.
இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூபாய் 7500 மதிப்பீட்டில் காதொலிக்கருவிகளும், மாவட்ட ஆட்சித்தலைவரின் தன்விருப்ப நிதியிலிருந்து 1 பயனாளிக்கு தலா ரூபாய் 2000 க்கான காசோலையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ரூபாய் 6,700 மதிப்பீட்டில் 2 பயனாளிகளுக்கு விலையில்லா எரிவாயு சலவைப் பெட்டிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் நல்லையா, துணை ஆட்சியர் (அகதிகள் முகாம்) நஜிம்முனிசா, உதவி ஆணையர் (கலால்) உதயக்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயசித்ரகலா. மாவட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீராம். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரவிச்சந்திரன், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments