மேற்பார்வை பொறியாளர், திருச்சி மின்பகிர்மான வட்டம், பெருநகரம் / திருச்சி அவர்களால் பெருநகரம்/திருச்சி மின்பகிர்மான வட்டத்தைச் சார்ந்த கோட்ட அலுவலகங்களில் வரும் பிப்ரவரி – 2026 ஆம் மாதம் கீழ்க்கண்ட வேலை நாட்களில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.
03.02.2026 (முதல் செவ்வாய்கிழமை) துறையூர் கோட்டம், 06.02.2026 ( முதல் வெள்ளிக்கிழமை) திருச்சி கிழக்கு கோட்டம், 10.02.2026 (இரண்டாம் செவ்வாய்கிழமை) இலால்குடி கோட்டம், 13.02.2026 (இரண்டாம் வெள்ளிக்கிழமை) திருவரங்கம் கோட்டம், 17.02.2026 (மூன்றாம் செவ்வாய்கிழமை) திருச்சி நகரிய கோட்டம், 24.02.2026 (நான்காம் செவ்வாய்கிழமை) மணப்பாறை கோட்டம், 27.02.2026 (நான்காம் வெள்ளிக்கிழமை) முசிறி கோட்டம்.
எனவே வரும் பிப்ரவரி
2026 ஆம் மாதத்தில் மேற்குறிப்பிட்டவாறு நடக்க உள்ள பொதுமக்கள் குறை தீர்க்கும் நாட்களில் மின்நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகின்றது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments