திருச்சியில் பொதுமக்களை கொடூரமாக தாக்கிய கஞ்சா கும்பல்

திருச்சியில் பொதுமக்களை கொடூரமாக தாக்கிய கஞ்சா கும்பல்

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் நக்தர் நகர் பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்னதாக கஞ்சா பயன்படுத்தி ரகளை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து சற்று நேரத்துக்கு முன்னதாக அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள் மீது கஞ்சா பயன்படுத்திய சிறுவர்கள் 30 பேர் கொண்ட கும்பல் சாலையில் கடப்பவர்களை சரமாரியாக ஆயுதங்களால் தாக்கியும் அரிவாளால் வெட்டியும் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். 4 பேர் பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நான்கு நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுப்பதாக கூறி கஞ்சா அடிக்கும் இந்த கும்பல் பொதுமக்களை மிக கொடூரமாக தாக்கி உள்ளது. மேலும் திருச்சி நகரில் அதிகமான பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதால் சிறுவர்கள் அதிகமானோர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாகவும் பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர். காவல்துறை உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச்சம்பவத்தில் காயமடைந்தோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .தற்போது எடமலைப்பட்டிபுதூர் போலீசார் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.