திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கே. பெரியப்பட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது இங்கு சுமார் 138 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தெற்கு சேர்ப்பட்டி, மொண்டிப்பட்டி சேங்குடி, சீத்தப்பட்டி, பெரியபட்டி தனி மாணிக்கம்பட்டி உள்ளிட்ட 10 கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
சுமார் 10 வருடங்களாக நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரி பெற்றோர்கள் பலவித போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று பள்ளி முன்பு அரசின் கவனத்த்தை ஈர்க்கும் வகையில் பொதுமக்கள், பெற்றோர்கள், பள்ளி வளாகம் முன்பு ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பெற்றோர்களிடம் மனப்ப்பாறை வட்டாட்சியர் தனலட்சுமி, மணப்பாறை காவல்துறை ஆய்வாளர் கோபி, உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜெகநாதன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் மூலம் தீர்வு காணலாம் என கூறியதையடுத்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments