திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உப்பிலியபுரம் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் உப்பிலியாபுரம் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் சுமார் 65 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் 1997 ஆம் ஆண்டு தமிழக அரசு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையாக அறிவித்தது தினமும் 300க்கும் மேற்பட்டோர் புற நோயாளிள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் 11 மருத்துவர்கள் இருக்க வேண்டும். தற்பொழுது இரு மருத்துவர்கள் மட்டும் சுழற்சி முறையில் சிகிச்சை அளிப்பதாகவும் அப்பகுதி மக்கள் சிகிச்சை பெற வரும் பொழுது அதிக நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

அரசியல்வாதிகள் மற்றும் அரசு அலுவலர்களிடம் அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், போர்க்கால அடிப்படையில் மருத்துவர்கள் மற்றும் அனைத்து வசதிகளும் செய்து தர வலியுறுத்தி

அப்பகுதியில் உள்ள அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து பொதுமக்களுடன் துறையூர் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சசி தலைமையில் தமிழக அரசிற்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments