திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் எண்டபுளி கிராமத்தில் காலனி தெருவில் சுமார் 50 குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். தங்கள் குடியிருப்புக்கு செல்வதற்கு சாலை அமைத்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து கண்ணூத்து முதல் துவரங்குறிச்சி செல்லும் சாலை எண்டபுள்ளியில் அரசு பேருந்தை மறித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இத்திற்கு சென்ற புத்தானநத்தம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல கை விட்டு கலைந்து சென்று விட்டனர். இந்த சாலை மறியலால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



            
            
            
            
            
            
            
            
            
            


Comments