திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட போலீஸ் காலனி தெருவில் நாய்கள் அதிகம் உள்ளது.
இந்த நாய்கள் அந்தப் பகுதியில் அந்நியர்கள் யாரேனும் அந்த பகுதிக்கு புதிதாக வந்தால் அவர்களை உள்ளே விடாமல் குரைத்து எச்சரிக்கை செய்யும் மேலும் இரவு நேரங்களிலும். திருடர்கள் மற்றும் அந்நியர்களை உள்ளேவருவதற்கு அஞ்சுவார்கள் இதனால் பொதுமக்கள் நிம்மதியாக தங்களது இல்லங்களில் எந்தவித அச்சமும் இன்றி இரவு பொழுதை கழித்து வந்தனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் தெரு நாய்கள் மர்மமான முறையில் ஆங்காங்கே இறந்து கிடப்பது அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெருநாய்கள் இறப்பதற்கு காரணம் யாரேனும் மருந்து வைத்துக் கொன்றார்களா அல்லது வேறு ஏதேனும் விச சத்துக்கள் கடித்தது இறந்தனவா என தெரியாமல் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments