பொதுமக்களுடைய ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும் - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
திருச்சி மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, தோட்டக்கலைதுறை, வேளாண்துறை கூட்டுறவு துறை சார்பில், 1,035 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் மாநகர் பகுதிகளில், 535 வாகனங்களிலும், புறநகர் பகுதிகளில், 500 வாகனங்களிலும் விற்பனை நடைபெறும். நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு வாகனங்கள் மூலம் விற்பனையை அண்ணாநகர் உழவர் சந்தை முன்னதாக துவக்கி வைத்து பேசுகையில் திருச்சி அரசு மருத்துவமனை 1200 படுக்கை வசதிகளும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 300 படுக்கை வசதிகளும் காஜமலை பகுதியில் 200 சித்தமருத்துவ படுக்கை வசதிகளுடன் சிகிச்சை அளிக்க ஏற்படுத்த செய்யப்பட்டுள்ளது.
தற்போது லால்குடி, தொட்டியம் பகுதியில் கொரோனா தடுப்பு சிகிச்சை மையங்கள் திறந்துவைக்கப்படவுள்ளது விரைவில் அங்கு ஆக்சிஜன் கூடிய வசதி ஏற்படுத்தப்படும் கோவிட் தொற்றை முழுவதுமாக ஒழிக்க வேண்டுமென்றால் பொதுமக்களுடைய ஒத்துழைப்பு மிக அவசியம். பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வரக் கூடாது .அப்படி வாகனங்களில் வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK