தென்னக ரயில்வே எம்ப்ளாய்ஸ் சங்கம் சார்பாக 28.09.22 காலை 7.30 மணியிளவில் பொன்மலை ஆர்மரிகேட் முன்பு ஆர்பாட்டம் எஸ்.ஆர்.இ.எஸ்.(SRES) பணிமனை கோட்ட தலைவர்L.பவுல் ரெக்ஸ், தலைமையில், உதவி பொதுச் செயலாளர் S.இரகுபதி, முன்னிலையில் நடைபெற்றது.

இரயில்வே தொழிலாள சகோதர சகோதரிகளுக்கு இந்த வருட PLB போனஸ் வழங்க கோரியும், புதிய உயர்த்தப்பட்ட இன்சென்டிவ்வை உடனடியாக பொன்மலை பணிமனை தொழிலாளர்களுக்கு வழங்கிட வலியுறுத்தியும் தனியார் மயத்தை எதிர்த்தும் காலி பணியிடங்களை நிரப்ப கோரியும், 18 மாத DA & DR ஐ அரியர்ஸாக வழங்க என கோரிக்கை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.

இதில் எஸ்.ஆர். இ.எஸ் (SRES) நிர்வாகிகள் சுந்தர், மதி, ஸ்டீபன், ஏசுராஜ் , பாஸ்கரன், பாலமுருகன், ஞானசேகரன் மற்றும் இரயில்வே தொழிலாளர்கள் பலர் ஆர்பாட்டத்தில் கலந்துக் கொண்டார்கள்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments