Site Logo mobile
Search Icon
Mobile Gif
Uncategorized

Railway Level Crossing கடக்க முயன்ற பள்ளி வாகனம் விபத்து -பதில் அளித்த ஒன்றிய ரயில்வேத்துறை அமைச்சர்

கடந்த 08.07.2025 அன்று தமிழ்நாட்டில், கடலூரில் இரயில் பாதை சாலை சந்திப்பை (Railway Level Crossing) கடக்க முயன்ற பள்ளி வாகனம் விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த 3 பள்ளி குழந்தைகள் இறந்து போனதும், பலர் காயம் அடைந்ததும் நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அந்த கவலைக்குரிய, மோசமான விபத்தை முன்வைத்து , இரயில் பாதை சாலை சந்திப்பில் (Railway Level Crossing) உள்ள MLC எனப்படும் manned level crossing முழுவதுமாக நீக்கிவிட்டு Automatic Interlocking System நிறுவுவதால் இது போன்ற விபத்துகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்ற எனது நோக்கத்திற்காக,

ஒன்றிய இரயில்வே துறைக்கு சில முக்கியமான கேள்விகளை நான் முன் வைத்திருந்தேன்.
அந்த கேள்விகளுக்கு ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் மாண்புமிகு அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் சார்பில் இன்று (30.07.2025) நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதில்களின் விவரம் பின்வருமாறு:

கடந்த மூன்று ஆண்டுகளில் இவ்வாறாக ஏற்பட்ட விபத்துகள் குறித்த எனது கேள்விக்கு,

2023-24 ஆண்டுல் 40 விபத்துகளும், 2024-25 ல் 31 விபத்துகளும், 2025 ல் இதுவரை மூன்று விபத்துகளும் பதிவாகியுள்ளதையும், இது கடந்த 10 ஆண்டுகளின் பட்டியலில் மிகவும் குறைவு என்றும், இந்திய இரயில்வே துறை பாதுகாப்பு அம்சங்களில் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதையும் தெரிவித்தார்.

கடந்த 08.07.2025 அன்று கடலூரில் ஏற்பட்ட விபத்து குறித்து எனது கேள்விக்கு பதில் அளிக்கையில்,

MLC எனப்படும் manned level crossing, கேட் எண் 170 இல் பயணிகள் இரயில் – பள்ளி வாகனத்தில் மோதிய விபத்தில் மூன்று குழந்தைகள் உயிரிழந்ததாகவும், மூன்று குழந்தைகள் காயமடைந்ததாகவும் கூறி, அது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்படி நிகழ்ந்த விபத்துகளும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறித்த பதிலில்,

கடலூர் விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு 11 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அந்த விபத்து ஏற்பட்டபோது இரயில்வே கிராசிங் கேட் மூடப்பட்டிருந்ததா? அல்லது திறந்திருந்ததா? என்ற எனது கேள்விக்கு,
Interlocking of level crossing செயல்முறைப்படி Railway Level Crossing இல் உள்ள இரயில்வே கேட் மூடப்பட்ட பிறகே இரயில்கள் அச்சாலையை கடப்பதற்கான சிக்னல் கிடைக்க பெறும். இதுவே நடைமுறையில் உள்ள செயலாகும் என்று பதில் அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 1255 MLC பாதைகளில் இதுவரை 1053 Interlocking System ஆக மாற்றப்பட்டுள்ளது என்றும், 72 LCகள் Interlocking System நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இரயில்வே மேம்பாலங்கள் (ROB) மற்றும் இரயில்வே சுரங்கப்பாதைகள் (RUB) அமைக்கும் ரயில்வே துறையின் தொடர் பணிகளால் பல இரயில் பாதை சாலை சந்திப்புகள் (Railway Level Crossing) நீக்கப்பட்டு வருவதையும் தெரிவித்தார்.

அப்பகுதியின் போக்குவரத்து எண்ணிக்கை, போக்குவரத்து நெரிசல் மற்றும் இரயில்கள் இயக்கத்தின் எண்ணிக்கையின் அடிப்படையில் இப்பணிக்கு முன்னுரிமை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 13,426 ROB/RUB அமைக்கப்பட்டுள்ளது என்றும், அதில் 747 தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அட்டவணையை வழங்கினார்.

01.04.2025 வரை 1,00,860 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியா முழுமைக்கும் 4402 ROB/RUB அமைவதற்கும், அதில் தமிழ்நாட்டில் மட்டும் 4,669 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 235 ROB/RUB அமைப்பதற்கான ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளதையும் தெரிவித்தார்.

குறிப்பாக விபத்து நடந்த கடலூரில் மட்டும் 92ல் 11 level
Crossing-ல் ROB/RUB
அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் மற்றவை மாநில அரசின் ஒப்புதலை பெற்று தொடங்கப்படும் என்றும் பதில் அளிக்கப்பட்டது. என்று துரை வைகோ அவர்கள் கூறினார்

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *