திருச்சிராப்பள்ளி ரயில்வே பாதுகாப்பு படை சார்பாக, பள்ளி மாணவர்களிடையே ரயில்வே பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.முதுநிலை கோட்ட ஆணையர் திரு. பிரசாந்த் யாதவ் மற்றும் உதவி ஆணையர் திரு. பிரமோத் நாயர் ஆகியோரது உத்தரவின் பேரில், திருச்சி RPF இன்ஸ்பெக்டர் திரு. அஜய் குமார் தலைமையில், திருச்சி லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களுக்கு பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் விளக்கமாக கூறப்பட்டது.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு,
ரயில் தண்டவாளத்தை கடக்கக் கூடாது,
ரயிலின் படியில் பயணம் செய்யக் கூடாது,
நகரும் ரயிலில் ஏறவோ இறங்கவோ கூடாது,
ரயில் பாதையில் செல்ஃபி எடுக்கக் கூடாது,
ரயில் பாதையில் கற்களை வைக்கக் கூடாது,
தீப்பற்றக்கூடிய பொருட்கள்/பட்டாசுகள் போன்றவற்றை எடுத்துச் செல்லக் கூடாது என்பன உள்ளிட்ட முக்கியமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
மேற்கண்ட செயல்களின் தீவிர விளைவுகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு, பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பதாக உறுதிமொழியும் மாணவர்களால் எடுக்கப்பட்டது.
சுமார் 100 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், 100 துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
திருச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Comments