திருச்சி எஸ்ஆர்எம்யூ ரயில்வே தொழிற்சங்கதின் சார்பில் கட்டாய ஓய்வில் வீட்டிற்கு அனுப்பும் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 17 தொழிலாளர்கள் நினைவாக வீரவணக்க நாள் கூட்டம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து நாடு தழுவிய கண்டன போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி பொன்மலை ரயில்வே ஆர்மரிகேட் முன்பு பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் கண்டன போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் போது
8ஆவது சம்பளக் கமிசன் கமிட்டியை காலதாமதமின்றி உடனடியாக நியமித்து குறிப்பு விதிமுறைகளை வெளியிட வேண்டும், 01.01.2026 முதல், புதிய சம்பள விகிதங்களை அமல்படுத்திட வேண்டும், அனைத்து காலியிடங்களையும் பூர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,
ஓய்வூதியதாரர்களின் பென்ஷனை முடக்காமல் அவர்களுக்கும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments