திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 22.10.2025 அன்று பதிவான மழை அளவுகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் பதிவான மொத்த மழை அளவு 975.5 மி.மீ ஆக உள்ளதுடன், சராசரி மழை அளவு 40.65 மி.மீ ஆகும்.
மாவட்டத்திலேயே அதிகபட்சமாக, மண்ணப்பறை தாலுகாவில் உள்ள பொன்னணியார் அணை பகுதியில் 129.4 மி.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, மருங்காபுரி தாலுகாவில் உள்ள கோவில்பட்டி பகுதியில் 108.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், லால்குடியில் உள்ள நந்தியார் ஹெட் பகுதியில் 47 மி.மீ, சமயபுரத்தில் 46.4 மி.மீ, புள்ளம்பாடியில் 45 மி.மீ மற்றும் சிறுகுடியில் 42.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது. திருச்சி மேற்கு பகுதியில் உள்ள டி.ஆர்.பி டவுனில் 56 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதே சமயம், முசிறி தாலுகாவில் மழை அளவு மிகவும் குறைவாகவே உள்ளது.
அங்குள்ள புலிவலம் பகுதியில் 2 மி.மீ மழையும், தாத்தையங்கார்பேட்டை மற்றும் முசிறி பகுதிகளில் முறையே 5 மி.மீ மற்றும் 6 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments