திருச்சி மாவட்டத்தில் நேற்று (04.05.2022) மாலை ஒரு மணி நேரம் விடாது கொட்டி தீர்த்த கோடை மழைமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பெய்த மழையால் ஓரளவு அதனை வெப்பத்தைத் தணித்து உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் மத்திய பகுதியான திருச்சியில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென மேகங்கள் திரண்டன, காற்று வீச தொடங்கியது. வானில் மின்னல் வெட்டியது, இடி இடித்தது சிறிது நேரத்தில் மழை தொடங்கியது சிறிது சிறிதாக கூடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழையால் நகரின் பல இடங்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பூமி குளிர்ந்தது கடந்த ஒருவாரமாக வெயில் 100 டிகிரியில் இருந்து 106 டிகிரி வரைபதிவாகி இருந்த சூழலில் நேற்று பெய்த மழையால் பூமியை குளிர்வித்து மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
திருச்சி மாவட்டத்தில் நேற்று(04.05.2022) நிலவரப்படி அதிகபட்சமாக 49.00மில்லி மீட்டர் மழை பதிவாகியது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் விவரம் : லால்குடி 4.20மிமீ, தேவமங்கலம் 29.40 மிமீ, சமயபுரம் 34.20மிமீ, சிறுகுடி 7.00மிமீ, வாத்தலை அணைக்கட்டு 31.00மிமீ, மணப்பாறை 10.60மிமீ, முசிறி 6.00மிமீ,
கோவில்பட்டி 21.20, பொன்னையார் டேம் 23.80 மில்லிமீட்டர், புலிவலம் 20.00மிமீ, நவலூர் குட்டப்பட்டு40.20மிமீ, தேன்பரைநாடு17..00 மிமீ, துறையூர் 26.00மிமீ, கொப்பம்பட்டி 20மிமீ, துவாக்குடி IMTI1.20மிமீ, பொன்மலை 24..60 மிமீ, திருச்சி விமான நிலையம் 17.40மிமீ, திருச்சி ஜங்ஷன் 49.00மிமீ, திருச்சி டவுன் 45 மிமீ என்ற அளவில் பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக திருச்சியில் பெய்த மழை அளவு 464.60 மிமீ, சராசரியாக 19.36மிமீ என்ற அளவில் பதிவாகியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments