திருச்சி மாவட்டம் காட்டூரைச் சேர்ந்த 60 வயது ஆண் ஒருவர் சாலை விபத்தில் கடுமையான காயம் அடைந்ததையடுத்து வெளிப்புற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு நீண்டகால இன்டியபேஷன் (Long-term Intubation) தேவைப்பட்டதால், தொடர்ச்சியான சிகிச்சையின் ஒரு பகுதியாக அவருக்கு மூச்சுக்குழல் துளையாக்கம்

(Tracheostomy- கழுத்தில் மூச்சுக் குழாயில் துளையிடுவது) மேற்கொள்ளப்பட்டது. உடல் நலம் முன்னேறியதால் பின்னர் மூச்சுக் குழல் குழாய் அகற்றப்பட்டது.
அதன் ஒருமாத காலத்திற்குப் பிறகு நோயாளிக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், (மூச்சுத் திணறலுக்குக் காரணம் டிராக்கியல் ஸ்டினோசிஸ் என்று கண்டறியப்பட்டு. அதே மருத்துவமனையில் மூச்சுத்திணறலைத் தணிக்க மீண்டும் இரண்டாவது முறையாக மூச்சுக்குழல் துளையாக்கம் செய்யப்பட்டது.அப்போது

மேற்கொள்ளப்பட்ட நெகிழ்வான குழல்வாய் தொலைநோக்கி பரிசோதனையில், சுமார் 1 செ.மீ நீளத்தில் மூச்சுக்குழல் சுருக்கம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மேலதிக பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக நோயாளி பரிந்துரைக்கப்பட்டார்.
பின்னர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, திருச்சிக்கு மேலதிக பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக வந்தார். அங்கு காது–மூக்கு–தொண்டை (ENT) அறுவை சிகிச்சை நிபுணர்கள் மேற்கொண்ட வீடியோ தொண்டைத் தொலைநோக்கி கருவி
பரிசோதனையில் மூச்சுக்குழல் துளையாக்கம் நிலையை விட மேல் பகுதியில் மூச்சு குழல் சுருக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
முழுமையான ஆய்வுகளுக்குப் பிறகு, நோயாளிக்கு குறைந்த வெப்பத்தன்மை வாய்ந்த கோபுலேஷன் என்ற கருவியின் உதவியுடன் மூச்சுக்குழல் சுருக்கத்தை சரி செய்ய திட்டமிட்டு வெற்றிகரமாக செய்யப்பட்டது
அதன்பின் மூச்சுக்குழல் சுருக்கம் மீண்டும் ஏற்படாமல் தடுக்க மான்டோகமெரி என்னும் டீ வடிவில் உள்ள குழாய் பொருத்தப்பட்டது.தற்போது நோயாளர் நலமாக உள்ளார் மற்றும் பின்தொடர்பு கண்காணிப்பில் உள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments