இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்தும் திட்டத்தின் கீழ் தங்கத்தின் மீதான (தங்க நகைக்கடன்) கடனை இரட்டிப்பாக்கி ரூபாய் 4 லட்சமாக உயர்த்தியுள்ளது. மார்ச் 31, 2023க்குள் முன்னுரிமைத்துறைக் கடன் வழங்கும் அனைத்து இலக்குகளையும் அடைந்த நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கு இந்த வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
RBI வங்கிகளுக்கு வழங்கிய இந்த நிவாரணத்தின் பலனை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அடைவார்கள். வங்கிகள் மற்றும் தங்களுடைய தேவைக்கேற்ப தங்கக் கடன் வாங்கலாம். இருமாத நாணயக் கொள்கை மதிப்பாய்வை அறிவித்த ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ், மார்ச் 31, 2023க்குள் முன்னுரிமைத் துறைக்கடன் வழங்குதல்
(பிஎஸ்எல்) கீழ் ஒட்டுமொத்த இலக்கை எட்டிய நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் (யுசிபி) அத்தகைய வங்கிகளில், திருப்பிச் செலுத்தும் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள தங்கக் கடன் வரம்பை ரூபாய் 2 லட்சத்தில் இருந்து ரூபாய் 4 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பிச் செலுத்தும் திட்டத்தின் கீழ், கடன் வாங்கியவர் அசல் தொகையையும் வட்டியையும் திருப்பிச் செலுத்தலாம்.இத்தொகை கடன் காலத்தின் முடிவில் மொத்தமாக திருப்பிச் செலுத்தப்படுகிறது. தங்கத்தின் மீதான கடனுக்கான வட்டி, முழு காலத்திற்கும் ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்படுகிறது.
ஆனால் அசல் தொகை மற்றும் வட்டி ஒரு முறை செலுத்த வேண்டும். அதனால்தான் இது ‘புல்லட்’ திருப்பிச் செலுத்துதல் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. என்றார் சக்திகாந்ததாஸ், ‘இந்த நடவடிக்கை மார்ச் 31, 2023க்குள் முன்னுரிமைத் துறை கடன் இலக்குகளை அடையும் யுசிபிகளுக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற எங்களது முந்தைய அறிவிப்பின்படி அமைந்துள்ளது’ என்றார்.
மார்ச் 2023க்குள் முதன்மைத் துறைக்கான கடன்களின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடையும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கு தகுந்த சலுகைகள் வழங்கப்படும் என்று இந்த ஆண்டு ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை மதிப்பாய்வில் கூறியிருந்தது. தொடர்ந்து நான்காவது முறையாக. அதாவது வீடு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான மாதாந்திர இஎம்ஐயில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments