மாண்புமிகு உச்ச நீதிமன்ற சுற்று அறிக்கையின் படி தேசிய சமரச மையம் நிகழ்வு நாடு முழுவதும் 01.07.2025 முதல் 30.09.2025 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்ட சமரச மையம் ஏற்பாட்டில் 11.08.2025 அன்று புதிய நீதிமன்ற வளாகம் நான்காவது மாடியில் மாண்புமிகு மாவட்ட நீதிபதி திரு M. கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் அனைவருக்கும் சமரச மைய தொடர்பான புதிதாக ஏற்பட்டுள்ள சமரச சட்டம் 2023 பற்றி பயிற்சி வகுப்பு மற்றும் கலந்துரையாடல் மாண்புமிகு நீதிபதி C. கார்த்திகா அவர்களால் பயிற்சி வகுப்பு எடுக்கப்பட்டது மேலும் மாண்புமிகு மாவட்ட நீதிபதி திரு M. கிறிஸ்டோபர் அவர்கள் உரையாடியபோது வழக்கறிஞர்கள் சமரச மையத்திற்கு பரிந்துரைத்து விரைவாக வழக்காடிகளுக்கு வழக்கு முடிப்பதற்கு உதவ வேண்டும் என்று உரையாற்றினார் உடன் மாண்புமிகு நீதிபதிகள் திரு B. சரவணன், மாண்புமிகு நீதிபதி திரு A. பிரபு ஆகியோர் உடன் இருந்தனர் நிகழ்ச்சியில் சமரச மையம் தொடர்பான துண்டறிக்கையை மாண்புமிகு நீதிபதிகள் சங்க நிர்வாகிகளிடம் வழங்கினர் இந்நிகழ்வில் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கத் தலைவர் S. P. கணேசன், செயலாளர் C. முத்துமாரி துணைத் தலைவர் வடிவேல்சாமி இணைச் செயலாளர் விக்னேஷ் குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் P. சுரேஷ், செயலாளர்
P. V. வெங்கட் மற்றும் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments