கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டது.இந்த நிலையில் தற்போது திருச்சி ரயில் நிலையத்தில் பிளாட்பார டிக்கெட் மீண்டும் 10 ரூபாய் என குறைக்கப்பட்டுள்ளது

பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களில் பயணிகள் எளிதாக பயணம் செய்வதற்காக வழியனுப்ப வருவோரின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பிளாட்பார டிக்கெட் விலை பத்து ரூபாயில் இருந்து 20 ரூபாயாக ஒரு சில முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் உயர்த்தப்பட்டது.

இந்த கட்டணம் உயர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்திருச்சிராப்பள்ளி (TPJ), தஞ்சாவூர் (TJ), கும்பகோணம் (KMU), மயிலாடுதுறை (MV) மற்றும் விழுப்புரம் (VM) ஆகிய இடங்களில் திருவிழாக்காலம் காரணமாக தற்காலிகமாக ரூ.20 ஆக உயர்த்தப்பட்ட பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணம் ரூ.10/- ஆக குறைக்கப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….. https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments