Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய நபரை கைது செய்து சிறையில் அடைத்தது தொடர்பாக.

திருச்சிராப்பள்ளி மாவட்டம். வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பளுவஞ்சி அஞ்சல், அக்குலம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா 35/25 த.பெ சீரங்கன் என்பவர் கடந்த 31.08.2025-ம் தேதி சுமார் 1930 மணியளவில் தனது TN 46 U 8735 என்ற பதிவு எண் கொண்ட Hero Splendor Pro இருசக்கர வாகனத்தில் கல்லாமேடு கவுண்டம்பட்டி செல்லும் கிராம சாலை கீழபளுவஞ்சியில் உள்ள முருகேசன் என்பவரின் வீட்டிற்கு அருகே சென்று கொண்டிருந்த போது இவருக்கு முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த கீழபளுவஞ்சியை சேர்ந்த சின்னு 74/25 த.பெ செல்லன் என்பவர் மீது மோதியதில், மேற்படி சின்னு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.


2) மேற்படி ராஜா என்பவர் குடிபோதையில் தனது இரு சக்கரவாகனத்தை தாறுமாறாக ஓட்டி, யார்ஒருவர் மீதும் மோதினால் உயிரழப்பு ஏற்படும் என தெரிந்திருந்தும், மேற்படி சின்னு மீது மோதி உயிரழப்பை ஏற்படுத்தியுள்ளார்.

3) எனவே, மேற்படி ராஜா என்பவர் மீது வளநாடு காவல் நிலைய குற்ற எண்.

305/25 U/s 105 BNS -ன் படி வழக்கு பதிவு செய்தும், மேற்படி நபரை துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்து, மது அருந்தியதற்கான சான்று பெறப்பட்டுள்ளது.

4) அதன் பிறகு, எதிரியை மணப்பாறை நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் 15.09.2025-ம் தேதி வரை அடைப்பு காவல் பெறப்பட்டுள்ளது.

5) எனவே, திருச்சி மாவட்டத்தில் இதுபோன்று மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி உயிரழப்பை ஏற்படுத்தும் நபர்கள் மீதும்.

அதே நேரத்தில் இளம் சிறாராக இருப்பின் அவரது பெற்றோர்கள் மீதும் மேற்படி சட்டத்தின் மூலம் தக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *