திருச்சி சிறு, குறு தொழில் நிறுவனம், ஆவடி போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டுத்துறை (சிவிஆர் டிஇ) இணைந்து ஆலோசனை மேற்கொண்டது.
இதுகுறித்து பெல்சியா தலைவர் ராஜப்பா ராஜ்கு மார் கூறியது:
பெல் நிறுவனங்களில் இருந்து வரும் ஆர்டர்கள் சமீப காலங்களாக குறைந்து விட்டன. இதன்காரணமாக திருச்சி மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள சிறு, குறு தொழில் நிறு வனங்கள் ராணுவத்திற்கு தேவையான உபகரணங் களுக்கான பாகங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கான மேம்பாடு குறித்த ஆலோசனை மேற்கொள்ள சென்னை தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் (டிக்) நிகழ்ச்சி ஏற்பாடு செய்தி ருந்தது.
பிஹெச்இஎல் திருச்சியில் உள்ள ஹெவி பிரஸ் மற்றும் நவீன சிஎன்சி இயந்திரங்கள் போன்ற உள்கட்டமைப்புகள் மூலம், பொன்மலை ரயில் பணிமனை போன்ற பெட்டிகள் மற்றும் ரயில் என்ஜின்களை மாற்றியமைக்கும், போர் டாங்கிகளை மாற்றுவதற்கான அசெம்பிளி லைன் அமைப்பதில் பிஹெச்இஎல் திருச்சிக்கு ஆதரவளிக்க முடியும் என்று தொழில்முனைவோர் தெரிவித்தனர். போர் டாங்கிகளில் உள்ள சுமார் 2,000 தற்காப்பு உதிரிபாகங்கள் மற்றும் பிற ஆயுதங்கள் திருச்சியில் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது.

இது சம்பந்தமாக MSMEகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள CVRDE மற்றும் TIIC உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் திட்டமிட்டுள்ளன. “Make in India திட்டத்தின் கீழ் தற்காப்புக் கூறுகளைத் தயாரிக்கத் தயாராக இருக்கும் MSMEகளுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஆதரவளிக்கும். திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி உள்ளிட்ட தேவையான ஆதரவு வழங்கப்படும்”
அர்ஜூன் டாங்க் பகுதிகள் ஒருங்கிணைப்பு பணி மேற்கொள்வது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. சிவி.ஆர்டிஇ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா, இயக்குனர் பால குமரன், இணை இயக்குனர் அன்பழகன், டிக்பொது மேலாளர்கள் ராமச்சந்திரன், துரைராஜ், பெல்சியா கந்தசாமி, கிருஷ்ணன். சுகுமார் உட் பட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய…
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           31
31                           
 
 
 
 
 
 
 
 

 27 February, 2022
 27 February, 2022





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments