திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட தொடக்க விழா (15.09.2023) அன்று தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவரவர் வங்கி கணக்குகளில் ரூ.1000/- தொகை வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் விண்ணப்பப்பதிவு முகாம்களில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலையினை https://kmut.tn.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பப்பதிவு முகாம்களில் பதிவு செய்து விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இ-சேவை மையம் வாயிலாக கட்டணமின்றி இலவசமாக மேல்முறையீடு செய்து கொள்ளலாம்.
இது தொடர்பாக பொதுமக்களின் கோரிக்கைகளுக்கான தகவல்களை கீழ்காணும் உதவி மையங்களை நேரடியாகவும், கீழ்க்கண்ட தொலைபேசி எண்கள் மூலமாகவும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments