கரூர் மாவட்டம் கோட்டக்கரையான் பட்டியைச் சேர்ந்த மனோன்மணிக்கும் திருச்சி சோமரசம்பேட்டையை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுக்முன்பு திருமணம் நடைபெற்று மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒரு வயதில் ஆண்குழந்தையும் உள்ளனர்.
இரண்டு தினங்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டநிலையில் மனோன்மணி குடும்பத்தினர் மகளை சமாதானப்படுத்தி நேற்றைய தினம் கணவர் வீட்டில் விட்டுவிட்டுசென்றனர்.
அதன் பின்னர் மாலை முதல் மனோன்மணி குடும்பத்தினர் மனோன்மணியை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், அவர்களது குடும்பத்தினரும் தொலைபேசி அழைப்பை ஏற்காத நிலையில் நேற்று மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது மனோன்மணி சோபாவில் இறந்துகிடந்தார்.
பாதுகாப்புக்கு நின்றிருந்த சோமரசம்பேட்டை போலீசாரம் மனோன்மணியின் குடும்பத்தினருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காத நிலையில் இறப்பில் சந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மனோன்மணி சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவர்களது குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்தும் போலீசார் அதனை கண்டு கொள்ளாத நிலையில் உடலை வாங்க மறுத்து மனோன்மணியின் உறவினர்கள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட பிறகு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி அவர்களை அங்கிருந்து கலைந்துபோக செய்தனர்.
சங்கர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திட்டமிட்டு தங்களது மகள் மனோன்மணியை கொலை செய்துள்ளதாகவும் அனைவருக்கும் இந்த கொலையில் சம்பந்தம் உள்ளது அவர்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் உயிரிழந்த தங்களது மகள் மனோன்மணி உடலை வாங்க மாட்டோம் எனவும் உறுதிபட தெரிவிக்கின்றனர் பெற்றோர் மற்றும் உறவினர்கள். சாலை மறியல் போராட்டத்தினால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments