திருச்சி பீம நகர் காவலர் குடியிருப்பில் இன்று காலை நடைபெற்ற கொலை சம்பவத்தில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொலை வழக்கில் கைதானவர்கள் மீது எஸ்சி எஸ்டி சட்ட விதிப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும், குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லாததால் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், இறந்த குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்
கோரிக்கை வைத்து திருச்சி அரசு மருத்துவமனை வாயில் முன்னதாக உள்ள சாலையில் உறவினர்கள் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து வந்த காவல் உதவி ஆணையர் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்களை தொடர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு அவர்களை கலைந்து செல்ல தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர் அதன் பிறகு அரசு மருத்துவமனை உள்ள ஓரமாக அனைவரும் நின்றனர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது அவர்களின் கோரிக்கை குறித்து அதிகாரிகள் கேட்டறிந்து வருகின்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments