தமிழகம் முழுவதும் கோடை வெயில் அளவு அதிகமாக உள்ளதால் பொதுமக்கள்பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் இந்த நிலையில் தற்போது கத்திரி வெயிலும் தொடங்கி உள்ளது.இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை அடைந்து வரும் இடையே அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் அரசியல் கட்சிகளும் தன்னார்வ அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் ஆங்காங்கே நீர் மோர் பந்தலை திறந்து பொதுமக்களுக்கு கோடை காலத்தில் ஏற்படும் நீர்ச்சத்தை போக்கும் வகையில் நீர் மோர் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் திருவெறும்பூர் அருகே உள்ள பாலாஜி நகர் பகுதியில் மத நல்லிணக்க கோடைகால நீர் மோர் பந்தலை மூன்று மதங்களைச் சேர்ந்த லலிதாம்பிகை கோயில் ஐயர் சந்தோஷ் குருக்கள், அற்புத குழந்தையை இயேசு திருத்தலத்தைச் சார்ந்த பாதர் அந்தோணி சுந்தர பாண்டியன், நூருல் ஜும்ஆ பள்ளிவாசல் ஹஜி ஷரீப் ஆகியா மும்மதுத்தைச் சார்ந்தோர் இணைந்து நீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டவை வழங்கினார் பின்னர் பேசிய மூவரும் மதம் கடந்து மனிதன் மனிதநேயத்துடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே எல்லா மதங்களும் வலியுறுத்துவதாகவும் இது போன்ற நிகழ்வுகளால் நாம் மதம் கடந்து மனிதநேயத்தை வளர்ப்பதற்கு தொடக்கமாக உள்ளதாகவும் தெரிவித்து தொடர்ந்து இது போன்ற கூட்டு பொது சேவைகள் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர் இதில் அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பங்கேற்றனர்.
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           37
37                           
 
 
 
 
 
 
 
 

 06 May, 2024
 06 May, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments