ரெம்டெசிவர் மருந்தைக் கொடுங்கள் என பெண் காவலர்கள் காலில் விழுந்து பெண்கள் கதறல் -  காத்திருந்தவர்கள் கண்ணீர்

ரெம்டெசிவர் மருந்தைக் கொடுங்கள் என பெண் காவலர்கள் காலில் விழுந்து பெண்கள் கதறல் -  காத்திருந்தவர்கள் கண்ணீர்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள இயன்முறை சிகிச்சை பயிற்சி கல்லூரியில் இன்று ரெம்டெசிவர் மருந்து வழங்கப்படும் என அறிவித்தால் சாலையிலேயே அமர்ந்து காத்திருந்தனர். நேற்று தமிழக அரசு சென்னை மதுரை உள்ளிட்ட  மாவட்டங்களில் ரெம்டெசிவர் மருந்தை அந்தந்த தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு நேரடியாக வழங்கப்படும்.

அவர்களின் விண்ணப்பங்களை வைத்து நோயாளிகளுக்கு கிடைக்க வழிசெய்யப்படும் என  அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் திருச்சியில் காலை 9:30 வரை எந்த அறிவிப்பும் இல்லாததால் காவல்துறையினர் அவர்களை ஒழுங்குபடுத்தி தனிமனித இடைவெளியுடன் நிறுத்தி வைத்திருந்தனர் .அப்போது திடீரென  திருச்சி கோட்டாட்சியர் விசுவநாதன் அங்கு வந்து ஒலிபெருக்கி மூலம்  ரெம்டெசிவர் மருந்து அவரவர் மருத்துவர்கள் மருத்துவமனை மூலமாக பெற்று உங்களுக்கு தருவார்கள். நீங்கள் கலைந்து செல்லுங்கள் என்று அறிவிப்பை வெளியிட்டார் .ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை.

வருவாய்த்துறையினர் மட்டும் காவல்துறையினரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி கலைந்து செல்ல வைத்தனர். அதில் மணப்பாறை மற்றும் தோகைமலை சேர்ந்த இரு பெண்கள் பெண் காவலர்கள்  காலில் விழுந்து கதறி அழுதனர்.  5 நாட்களாக ரெம்டெசிவர் வாங்க காத்திருப்பதாகவும் தெரிவித்தனர். இன்று ஒருநாள் எங்களுக்கு மருந்தைக் கொடுத்து என் கணவரை காப்பாற்றுங்கள் என்று மணப்பாறையை சேர்ந்த வயதான பெண்மணியும் அதேபோல் தோகமலை சேர்ந்த இன்னொரு பெண்மணியும் தனது உறவினர் காப்பாற்ற என்ற ரெம்டெசிவர் மருந்து வேண்டும் என கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

காவல்துறையினர் எங்கள் கட்டுப்பாட்டில் மருந்து வழங்க முடியாது மாவட்ட நிர்வாகம் நேரடியாக அறிவிப்பு வெளியிட்டு விட்டதால் நீங்கள் மருத்துவமனையில் சென்று மருத்துவர் மூலமாக மருந்தை வாங்கி கொள்ளுங்கள் என்று சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர் .முன்னதாக தனிமனிதன் ஒருவர் ரெம்டெசிவர் வாங்க  காத்திருந்த பொதுமக்களுக்கு உணவுகளையும் வழங்கினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK