திருச்சி மெயின் கார்டு கேட் பகுதியில் நூற்றுக்கணக்கான தரைக்கடைகள் உள்ளன. இந்த கடைகள் பொதுமக்களுக்கு இடையூறாகவும், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாக கூறி இந்த பகுதியில் உள்ள 50 -க்கும் மேற்பட்ட கடைகளுக்கு திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி அருகில் பழைய குட்ஷெட் ரோட்டில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் நாங்கள் அந்த இடத்திற்கு செல்ல மாட்டோம் . ஹோலி கிராஸ் கல்லூரி அருகில் மாநகராட்சி பழைய கட்டிடம் இருந்த இடத்தில் எங்களுக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மெயின் கார்டு கேட் நுழைவாயில் பகுதியில் உள்ள 50 கடைகளை அகற்ற இன்று மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.ஆனால் நாங்கள் பழைய குட்ஷெட் ரோட்டிற்கு செல்ல மாட்டோம். நாங்கள் கேட்கிற இடம் தர வேண்டும் என வலியுறுத்தி தரைக் கடை வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் நடத்திய தரைக் கடை வியாபாரிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments