பத்து ருபாய் இயக்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர். அதில் மாநகராட்சிப் பகுதியிலும், நெடுஞ்சாலைகளிலும் அமைக்கப்பட்ட வேகத்தடைகளின் மீது வெள்ளை பூச்சு பூசவும், புறநகர் மற்றும் மாநகர பேருந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்தவும், அதிக அளவு ஹாரன் சப்தத்தை குறைக்கவும், திருவெறும்பூர் தாலூகா அலுவலகத்தில் பேருந்துகள் நின்று செல்லவும்,

ஆங்காங்கு பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளை விரைந்து மூடவும்,வீட்டு தோட்ட கழிவுகளை அகற்றவும், பராமரிப்பில்லாமல் உள்ள சோழன் நகர் பூங்காவை சீரமைக்கவும், பல இடங்களில் கசிந்து வரும் குடிநீர் குறித்து வரும் புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும்.

காட்டூர் பாப்பா குறிச்சிக்கு மாற்றப்பட்ட ரேசன் கடையை மூத்த குடிமக்களுக்கும் ஏனையோரும் பொருள் வாங்கி பயனடைய அண்ணா நகருக்கே மாற்றிடவும், பால் பண்ணை டூ துவாக்குடி செல்லும் பிரதான போக்குவரத்து சாலையை குண்டும் குழியுமாக உள்ளதை மீண்டும் புதிய சாலை அமைத்திட கோர் பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார் மற்றும் துணை செயளர் கிருஷ்ணானந்தம் மனு அளித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments