Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஜூன் 1ம் தேதியை  “திருச்சி தினமாக” அறிவிக்க மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை!!!

ஜூன் 1 அன்று திருச்சி மாநகராட்சி உருவாகி 25 வருடம் முடிந்து 26 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. இதனை மறவாது வகையில் வரும் தலைமுறைக்கு தெரியும் வண்ணம் திருச்சி மாநகராட்சி “திருச்சி தினம்” என்று அறிவிக்க வேண்டும். என Shine TREEchy அமைப்பினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு வழங்கினர்.

சென்னை கோயம்புத்தூர் ஆகிய மாநகராட்சிகளில் மாநகராட்சி தினம் என கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நம்முடைய திருச்சி மாநகராட்சியிலும் “திருச்சி தினம்” என கொண்டாட ஆணையரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அமைப்பின் சார்பில்…திருச்சி தினத்தை கொண்டாட திருச்சியில் உள்ள மாநகராட்சி பள்ளிகள், கல்லூரி மாணவ மாணவிகள், திருச்சியில் இருக்கும் பல தொழிற்சாலைகளில் பணிபுரியும் நபர்களை வைத்து சிறப்பிக்கும் வகையிலும் மற்றும்

திருச்சி பற்றியும் இங்குள்ள சிறப்புமிக்க தலங்கள் பற்றியும் எழுத்துப் போட்டி, நடனப்போட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் திருச்சியில் உள்ள மக்களிடம் மாநகரத்தின் சிறப்பினைப் பற்றி கேட்டறிந்து சிறப்பாக இந்த தினத்தை கொண்டாட வேண்டுமென கோரிக்கையில் கூறியுள்ளனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *