அமைச்சர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சந்தித்து தனது
திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட நவல்பட்டு கிராம சுற்றுவட்டாரத்தில் வசிக்கும்
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில், அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தவும், பொன்மலை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துக் கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை மனு அளித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments