அரசாணை எண்.97, 21.02.2025-ன் படி ஒருமுறை வரன்முறைப்படுத்தும் சிறப்பு திட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வரும் தகுதியான பயனாளிகளின் குடியிருப்பு பகுதிகளை வரன்முறைப்படுத்தி பட்டா வழங்கும் விதமாக மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தலைமையில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் ஆகியோர் இன்று (09.10.2025) திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட தில்லைநகர் மக்கள் மன்றம், தென்னூர் உழவர் சந்தை மைதானம் மற்றும் பெரியமிளகு பாறை பகுதிகளில் நடைபெற்ற விழா நிகழ்வுகளில் திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக வசித்து வரும் 916 குடியிருப்பு வாசிகளுக்கு ரூபாய் 146.64 கோடி மதிப்பீட்டிலான பட்டாக்களை வழங்கினார்கள்.
அதன் அடிப்படையில் இன்று திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட தில்லை நகர் மக்கள் மன்றத்தில் நடைபெற்ற விழா நிகழ்வில் புத்தூர் வாமடம், கீரைக்கொல்லைத்தெரு, தாமலவாரூபயம் தில்லை நகர் 80 அடி ரோடு, தூக்குமேடை ரோடு, சட்டமன்ற உறுப்பினர் அலுவலக சாலை மற்றும் தென்னூர் வாமடம் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக வசித்து வரும் 75 குடியிருப்பு வாசிகளுக்கு ரூபாய் 4.47 கோடி மதிப்பீட்டிலான பட்டாக்களையும், அதனைத் தொடர்ந்து, தென்னூர் உழவர் சந்தை அருகில் நடைபெற்ற விழா நிகழ்வில் ஆழ்வார் தோப்பு, புத்தூர் வண்ணார பேட்டை – II, புத்தூர் ஆதிநகர், புத்தூர் கல்லாங்காடு Phase – II, கோ-அபிசேகபுரம், மார்சிங்பேட்டை, புத்தூர் வண்ணார பேட்டை – III, இனாம்தார் தோப்பு மற்றும் திரு.வி.க நகர் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக வசித்து வரும் 320 குடியிருப்பு வாசிகளுக்கு ரூபாய் 7.44 கோடி மதிப்பீட்டிலான பட்டாக்களையும், திருச்சிராப்பள்ளி பெரியமிளகுபாறை பகுதியில் நடைபெற்ற விழா நிகழ்வில் பெரியமிளகுபாறை பிராட்டியூர் கிழக்கு பாப்பாகாலனி, பிராட்டியூர் கிழக்கு ராமச்சந்திரா 4 வது நகர், சொக்கலிங்கபுரம், அரசு காலனி உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக வசித்து வரும் 521 குடியிருப்பு வாசிகளுக்கு ரூபாய் 134.72 கோடி மதிப்பீட்டிலான பட்டாக்களும் என மொத்தம் 916 குடியிருப்பு வாசிகளுக்கு ரூபாய் 146.64 கோடி மதிப்பீட்டிலான பட்டாக்களை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.
நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
இந்நாள் வரைக்கும் யாரும்
செய்ய முடியாத ஒரு மாபெரும் சாதனையாக தமிழ்நாடு
முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 70 ஆண்டுகளுக்கு மேலாக மூன்று, நான்கு தலைமுறையாக குடியிருந்து வரும் மக்களுக்கு நீண்டநாள் கனவு நிறைவேறும் வகையில் அரசாணை எண்.97 மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பல்வேறு இடர்பாடுகளையும் களைத்து இத்திட்டத்தின் மூலமாக மக்களின் வாழ்வில் ஒரு மாபெரும் வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேம். இத்திட்டம் பொதுமக்களுக்கு மாபெரும் வரப்பிரசாதமாக திகழும் வகையிலும் மக்களின் கனவுகள் அனைத்தும் நிறைவேறிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் முழுவதுமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதில் பெருமிதம் கொள்கிறோம் என தெரிவித்தார்.
முன்னதாக தென்னூர் உழவர் சந்தை அருகில் நடைபெற்ற பட்டா வழங்கும் விழா நிகழ்விடத்தில் மழை நீர் சேகரிப்பதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு குறும்படங்களை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு திரை வாகனத்தில் ஒளிபரப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் அவ்வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வுகளில், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) சேஷத்ரிமயும் தீபிசானு, அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலட்சுமி, திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருள். வட்டாட்சியர் பிரகாஷ், நகரபொறியாளர் சிவபாதம், மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் வைரமணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைமை பொறியாளர் என்.ஜெயக்குமார், நிர்வாக பொறியாளர் ராஜகோபால், மாநகராட்சி உதவி ஆணையர்கள் சண்முகம், சென்னுகிருஷ்ணன், மண்டல தலைவர்கள். மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments