மண்ணச்சநல்லூர் கூத்தூர் சிவசக்தி கார்டன் பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட முதலமைச்சர் நூறுநாள் தொகுதி திட்டத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
திருச்சி மண்ணச்சநல்லூர் தாலுக்கா கூத்தூர் பஞ்சாயத்து பளூர் (வார்டுஎண் 3)சிவசக்தி கார்டன் பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் குழந்தைகள் சாலை வசதி குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகூட இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
புனித ஜோசப் பிரைமரி நர்சரி பள்ளி உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் பெரும் இன்னல்களை குறிப்பாக மழைக்காலங்களில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
பகுதியைச் சுற்றி கருவேல மரங்கள் அதிகமாக காணப்படுகின்றது மழை நேரங்களில் பாம்புகள் அபாயமும் ஏற்படுகிறது.
மின்விளக்கு இல்லாததால் இந்த பாதையில் வருவதற்குபணிக்கு செல்லும் பெண்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
இதற்கு தீர்வு வேண்டி பல்வேறு முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் முதலமைச்சர் நூறுநாள் தொகுதி திட்டத்தில் பொதுமக்கள் புகார் அனுப்பியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அங்கீகாரத்திற்காக அனுப்பப்பட்டுள்ளது ஆனால் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
திருச்சி மாநகராட்சி இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments