எத்தனை கோரிக்கைகள் வைத்தாலும் அத்தனையும் நிறைவேற்றும் அரசாக திமுக இருக்கும். வாக்கு சேகரிப்பின் போது அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

எத்தனை கோரிக்கைகள் வைத்தாலும் அத்தனையும் நிறைவேற்றும் அரசாக திமுக இருக்கும். வாக்கு சேகரிப்பின் போது அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

திருச்சி திருவெறும்பூர்  தொகுதியில் அதிமுக வேட்பாளர் ப.குமாருக்கு எதிராக திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து தொண்டர்கள் மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்து பெண்கள் பூரண கும்பத்துடன்  வேட்பாளருடன் ஊர்வலமாக வந்தனர்.  
இதையடுத்து, திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரச்சாரத்தின் போது பேசுகையில்... இந்த தொகுதி ஆளுங்கட்சி தொகுதியாக மாறும் பொழுது மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் செயல்படுத்த ஏதுவாக இருக்கும்.

எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்து போராடி போராடி பல திட்டங்களை பெற்றிருந்தாலும், இன்னும் இரண்டு மாத காலங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் எத்தனை கோரிக்கைகள் வைத்தாலும் அத்தனையும் நிறைவேற்றுவோம் என்றார்.

பிரச்சாரத்தின் போது பொன்மலை பகுதி செயலாளர் தர்மராஜ் உள்ளிட்ட திமுக மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் உட்பட பலரும் உடனிருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU